விவோ நிறுவனம் விவோ ஒய் 51 (2020) என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் டிசம்பர் மாத முதல் வாரத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ Y51 (2020) ஸ்மார்ட்போன் ஆனது 6.38 இன்ச் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 1080×2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகித அளவினைக் கொண்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது.

விவோ Y51(2020) ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியினையும், மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரையில் விவோ Y51(2020) ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினையும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிமைரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.
விவோ Y51(2020) ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இது கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் வெளியாகியுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை புளூடூத் 5.0, 4 ஜி எல்டிஇ, டூயல் சிம், ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடூ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.