Mobile

இந்தியாவில் அறிமுகமானது விவோ ஒய் 50 ஸ்மார்ட் போன்!!

விவோ ஒய் 50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ ஒய் 50 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஃபன்டூச் 10 ஐ இயக்குவதாய் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் முழு எச்டி உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளேவுடனான ஹோல்-பஞ்ச் வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது விவோ ஒய்  50 ஸ்மார்ட் போன்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC கொண்டு இயங்குவதாய் உள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டதாக உள்ளது.

பேட்டரி  அளவினைப் பொறுத்தவரை 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரை விவோ ஒய் 50 ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், சுற்றுப்புற ஒளி சென்சார் மற்றும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

Related posts

இரு தினங்களில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி நோட் 10லைட்!!

TechNews Tamil

அதிரடியாக களம் இறங்கியது விவோ நிறுவனத்தின் Y51s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல்!

TechNews Tamil