Mobile

சீனாவில் அறிமுகமானது விவோ Y31s ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y31s ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த விவோ Y31s ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ Y31s ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாகவும், மேலும் 1080×2408 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் 90Hz refresh rate கொண்டதாகவும், பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை விவோ Y31s ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது விவோ Y31s ஸ்மார்ட்போன்!!

மேலும் இது ஆண்டராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 10.5 இயங்குதளம் கொண்டதாக உள்ளது, மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினையும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை விவோ Y31s ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் கொண்டதாகவும், முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.

விவோ Y31s ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை புளூடூத் 5.0, 4 ஜி எல்டிஇ, டூயல் சிம், ஜிபிஎஸ், க்ளோனாஸ், BeiDou மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதி கொண்டதாகவும் உள்ளது.

Related posts

அறிமுகமானது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கேலக்ஸி ஏ30எஸ்!

TechNews Tamil

ரியல்மி 3 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்!

TechNews Tamil

வெளியானது சியோமி 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி

TechNews Tamil