Mobile

விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள விவோ Y20G ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y20G ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த விவோ Y20G ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ Y20G ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது 720×1600 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் 20:9 என்ற திரைவிகித அளவினைக் கொண்டதாகவும் உள்ளது.

விவோ Y20G ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள விவோ Y20G ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை விவோ Y20G ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

விவோ Y20G ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றையும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

விவோ Y20G ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 13 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவு உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் களம் இறங்கியது ZTE Blade 20 5G ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது Mi Note 10 மற்றும் Mi Note 10 Pro!

TechNews Tamil

அக்டோபர் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Moto G8 Plus அறிமுகம்!

TechNews Tamil