மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் விவோ ஒய்20 ஏ ஸ்மார்ட்போனை இந்தியாவில் களம் இறங்கியுள்ளது. இந்த விவோ ஒய்20 ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ ஒய் 20 ஏ ஸ்மார்ட்போன் டான் ஒயிட் மற்றும் நெபுலா ப்ளூ என்ற இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ளது. விவோ ஒய் 20 ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.51 இன்ச் டிஸ்ப்ளே முழு எச்டி ப்ளஸ் ஆதரவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது ஸ்னாப்டிராகன் 439 செயலி கொண்டதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

மேலும் இது 64 ஜிபி உள்சேமிப்பு, 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய அளவு எஸ்டி கார்ட் ஸ்லாட் கொண்டுள்ளது.
மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா, 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டதாகவும், மேலும் விவோ ஒய் 20 ஏ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.