Mobile

விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாகவுள்ள விவோ ஒய்20 (2021) ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ ஒய்20 2021 ஸ்மார்ட்போன் மலேசியாவில் சமீபத்தில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் விவோ ஒய்20 (2021) ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் வெளியாகும் என்று தெரிகின்றது.

விவோ ஒய்20 (2021) ஸ்மார்ட்போன் டான் ஒயிட் மற்றும் நெபுலா ப்ளூ போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

விவோ ஒய்20 (2021) ஸ்மார்ட்போன் ஆனது இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபண்டச் ஓஸ் கொண்டுள்ளது.

மேலும் இது 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டதாகவும், மேலும் மெமரியினை நீட்டிக்கக் கூடியதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை விவோ ஒய்20 (2021) ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா கொண்டதாகவும், மேலும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது. மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவை இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் விவோ Y20T ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அறிமுகமானது அசரவைக்கும் அம்சங்களுடன் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடியான விலை குறைப்பு!!

TechNews Tamil