Mobile

ஸ்விட்சர்லாந்தில் அறிமுகம் ஆகியுள்ள விவோ வை1எஸ் ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் ஸ்விட்சர்லாந்தில் விவோ வை1எஸ் என்ற ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டு உள்ளது. இந்த விவோ வை1எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வை1எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.22 இன்ச் புல்வியூ ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் அறிமுகம் ஆகியுள்ள விவோ வை1எஸ் ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் இயங்குதளம் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது, மேலும் கேமரா அளவினைப் பொறுத்தவரையில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா பேஸ் அன்லாக் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4030 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  டூயல் சிம் ஸ்லாட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.

மேலும் விவோ வை1எஸ் ஸ்மார்ட்போன் ஆலிவ் பிளாக் மற்றும் அரோரா புளூ நிறங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகவுள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அதிரடியாக கேமிங்க் போனை களமிறக்கிய லெனோவா நிறுவனம்!!

TechNews Tamil