விவோ நிறுவனத்தின் வை19 ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஆஃப்லைன் ஸ்டோர்களின் மூலம் விற்பனையைத் துவக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- விவோ வை19 ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 13,999
இந்த ஸ்மார்ட்போன் OS 9 Android 9 Pie இயங்குதளம் கொண்டதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் Full-HD உடன் 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இது octa-core Qualcomm Snapdragon 675 SoC கொண்டதாக உள்ளது, இது பின்புறத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் ஸ்னாப்பர், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் கேமரா போன்றவைகள் உள்ளது.
இது fingerprint சென்சார் கொண்டதாகவும் உள்ளது. Bluetooth 5.0, dual-band Wi-Fi, , USB OTG, போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இது மேலும் waterdrop-style notch கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.