மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் சிங்கப்பூரில் விவோ Y15s ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த விவோ Y15s ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ Y15s ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி, 720×1600 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
மெமரி அளவாக விவோ Y15s ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.
விவோ Y15s பின்புறத்தில் 13எம்பி ஏஐ ரியர் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.
விவோ Y15s 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக மைக்ரோ-USB போர்ட், 4G, புளூடூத் v5.0 மற்றும் Wi-Fi கொண்டுள்ளது.