விவோ Y15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990 ஆக இருந்தது, தற்போது அது ரூ.12,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ Y15 ஸ்மார்ட்போன் மாடல் 6.35 இன்ச் வாட்டர்டிராப் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544 x 720 பிக்சல் திர்மானம் கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.
மேலும் இந்த சாதனமானது ஆக்டோ-கோர் மீடியாடெக் பி22 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது

விவோ Y15 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் உள்ளன.
இதில் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. விவோ வ்யை15 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளது.
இதன் விலைகுறைப்பு மிகச் சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.