விவோ நிறுவனம் விவோ Y12 (2020) ஸ்மார்ட்போனை கூகிள் ப்ளே கன்சோலில் வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவோ Y12 (2020) ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ Y12 ஸ்மார்ட்போன் ஆனது 6.35 இன்ச் எச்டி 720×1,544 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ SoC இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை மெமரி கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா போன்றவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது விவோ Y12 ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது. மேலும் இது விவோ Y12 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.
இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரை 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி ஓடிஜி ஆதரவுடன் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.