Mobile

இந்தியாவில் அறிமுகமானது விவோ வை30 ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் விவோ வை30 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ வை30 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த விவோ வை30 ஸ்மார்ட்போன் டேசில் புளூ மற்றும் எமரால்டு பிளாக் நிறங்களில் வெளியாகியுள்ளது.

விவோ வை30 ஸ்மார்ட்போன் ஆனது, 6.47 இன்ச் ஹெச்டி 720×1560 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் கொண்டு இயங்குவதாக உள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது விவோ வை30 ஸ்மார்ட்போன்!!

மெமரியினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம்,  128 ஜிபி மெமரி போன்றவற்றினையும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி சென்சாரினைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

புதிய அப்டேட் பெற்றுள்ள கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் ஜியோமியின் Mi Note 10!

TechNews Tamil

விற்றுத் தீர்ந்த Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஜியோமி போன்கள்.!!

TechNews Tamil