Mobile

விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள விவோ எக்ஸ்50இ ஸ்மார்ட்போன்!

விவோ நிறுவனம் எக்ஸ் 50 இ 5 ஜி ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ எக்ஸ் 50இ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எக்ஸ் 50 இ 5 ஜி ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் எஃப்.எச்.டி மற்றும் ரெசல்யூஷன் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சமாக வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் கைரேகை ஸ்கேனர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள விவோ எக்ஸ்50இ ஸ்மார்ட்போன்!

கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி முதன்மை சென்சார், 13MP டெலிஃபோட்டோ சென்சார், 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

மேலும் 4,350 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும்,  விவோ எக்ஸ் 50 இ ஸ்மார்ட்போன் ஆனது 5 ஜி யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாகவும், மேலும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாவும் உள்ளது.

இது நைட் மற்றும் வாட்டர் மிரர் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களுடன் எல்ஜி கே51 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விவோ வி15 மாடலில் உள்ள சிறப்பு அம்சங்கள்!!

TechNews Tamil

விற்பனையினைத் துவக்கியுள்ள Realme X50 pro 5G ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil