விவோ எக்ஸ் 50 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் டிஜிட்டல் நிகழ்வு மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த் விவோ எக்ஸ் 50 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் ஆனது 6.56 இன்ச் 2376×1080 பிக்சல் FHD+ 19.8:9 E3 AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸ்50 — ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் அட்ரினோ 618 GPU வசதி கொண்டதாகவும், மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 8 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128 ஜிபி (UFS 2.1) / 256 ஜிபி (UFS 2.1) மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.
விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குவதாக உள்ளது. மேலும் கேமராவை பொறுத்தவரை இந்த விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 120° அல்ட்ரா வைடு லென்ஸ், 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா போன்றவற்றினையும், முன்புறத்தில் 32 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினை பொறுத்தவரை யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டதாகவும், மேலும் 4200எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.