விவோ நிறுவனம் தற்போது விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த மாத இறுதிக்குள் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.56 இன்ச் முழு எச்டி AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2376 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிராசஸர் உடன் அட்ரினோ 650ஜிபியு சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி/12ஜிபி ரேம் மெமரி வசதியினையும், 128ஜிபி/256ஜிபி மெமரியினையும் கொண்டுள்ளது.
கேமரா அளவினைப் பொறுத்தவரை விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி சாம்சங் எஸ்1 சென்சார், 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில், 8எம்பி மேக்ரோலென்ஸ் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இது 32எம்பி எச்டிஆர் 10பிளஸ் ஆதரவினையும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாயும் உள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4315எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை
இந்த ஸ்மார்ட்போன் டூயல்
பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்,
என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.