Mobile

அதிரடியாக களமிறங்கிய விவோ எக்ஸ்30 ப்ரோ

விவோ நிறுவனம் டிசம்பர் 16 ஆம் தேதியான நேற்று தனது விவோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  1. விவோ எக்ஸ்30 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.40,400
  2. விவோ எக்ஸ்30 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.43,400)

அதிரடியாக களமிறங்கிய விவோ எக்ஸ்30 ப்ரோ

இந்த விவோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.44 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2400*1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9பை சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ்10 கொண்டு இயங்கக்கூடியதாகவும் உள்ளது.

இது 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்சைனோஸ் 980 பிராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது 8 ஜிபி LPDDR4x ரேம் வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் 4350 எம்ஏஎச் பேட்டரி  கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, இது வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட போன்ற இணைப்பு ஆதரவுகளையும் கொண்டதாக உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இது பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 32எம்பி போர்ட்லெயிட் லென்ஸ், 13 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது பின்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் இரண்டு வேரியண்டுகளில் களமிறங்கிய ரெட்மி 9A ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விற்பனையைத் துவக்கிய விவோ வை19 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil