விவோ நிறுவனம் நேற்று தனது விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
- விவோ எக்ஸ்30 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.33,400
- விவோ எக்ஸ்30 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி
மெமரி வகையின் விலை- ரூ.36,400)

இந்த விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.44 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2400*1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இது 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்சைனோஸ் 980 பிராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது 8 ஜிபி LPDDR4x ரேம் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9பை funtouch Os10 கொண்டு இயங்கக்கூடியதாகவும் உள்ளது.
மேலும் 4350 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, இது வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி
டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட போன்ற இணைப்பு
ஆதரவுகளையும் கொண்டதாக உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை இது
பின்புறத்தில் 64எம்பி
பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 32எம்பி போர்ட்லெயிட் லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது பின்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.