Mobile

இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பு, 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்ப ஆதரவு கொண்டுள்ளது.

இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி கொண்டுள்ளது. இயங்குதளம் என்று கொண்டால் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2எம்பி மேக்ரோ கேமராவையும் 44எம்பி செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் 4050 எம்ஏஎச் பேட்டரியுடன் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட வைஃபை, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி-சி சார்ஜ் கொண்டுள்ளது.

Related posts

விற்பனைக்கு வந்தது OnePlus 7T Pro McLaren Edition!

TechNews Tamil

40 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ஹூவே நோவா 7ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil