இந்தியாவில் விவோ வி20 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த விவோ வி20 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ வி20 ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை விவோ வி20 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை விவோ வி20 ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ், 44 எம்பி பிரைமரி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சதியூட்டுவதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.