Mobile

இந்தியாவில் களம் இறங்கியது விவோ வி20 ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் விவோ நிறுவனம் தற்போது விவோ வி20 என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது. விவோ வி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதிகளைக் கொண்டுள்ளது.

விவோ வி20 ஸ்மார்ட்போனில் சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் களம் இறங்கியது விவோ வி20 ஸ்மார்ட்போன்!!

மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. விவோ வி20 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. மேலும் விவோ வி20 ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

விவோ வி20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி monochrome சென்சார் போன்ற கேமராக்களையும், 44எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அசர வைக்கும் அம்சங்களுடன் ஓப்போ எஃப்17 ஸ்மார்ட்போனை !!

TechNews Tamil

Diwali With Mi சேல்: ரெட்மி மொபைல்களுக்கான தள்ளுபடிப் பட்டியல் இதோ!!

TechNews Tamil

சீனாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி W21 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil