தாய்லாந்தில் விவோ நிறுவனம் தற்போது வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டது. விவோ நிறுவனம் தற்போது விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ளது.
விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.44 அங்குல முழு எச்டி மற்றும் 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது, மேலும் இது AMOLED டிஸ்ப்ளே ஆதரவினைக் கொண்டுள்ளது.
விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி செயலி கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 அடிப்படையில் ஃபன்ட் டச் ஓஎஸ் 11 இல் இயங்குதளம் கொண்டுள்ளது.
இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகா பிக்சல் மோனோக்ரோம் மற்றும் முன்பக்கத்தில் 44 எம்பி முதன்மை, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது 128 ஜிபி உள் சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது 4,000 mAh பேட்டரி கொண்டுள்ளது, மேலும் 33W ஃபிளாஷ் சார்ஜ் மற்றும் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் தன்மை கொண்டுள்ளது.