Mobile

தாய்லாந்தில் களமிறங்கிய விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!

தாய்லாந்தில் விவோ நிறுவனம் தற்போது வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வி 20 ஸ்மார்ட்போன் ஆனது விவோ வி 20 ப்ரோ 6.44 அங்குல முழு எச்டி மற்றும் 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் AMOLED டிஸ்ப்ளே ஆதரவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

தாய்லாந்தில் களமிறங்கிய விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 அடிப்படையில் ஃபன்ட் டச் ஓஎஸ் 11 இல் இயங்குதளம் கொண்டதாகவும் உள்ளது.

விவோ வி 20 ப்ரோ கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகா பிக்சல் மோனோக்ரோம் மற்றும் முன்பக்கத்தில் 44 எம்பி முதன்மை, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

விவோ வி 20 ப்ரோ 128 ஜிபி உள் சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது. மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4,000 mAh பேட்டரி கொண்டதாகவும், மேலும் 33W ஃபிளாஷ் சார்ஜ் மற்றும் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிப்பதாகவும் உள்ளது.

Related posts

அறிமுகமான சாம்சங் கேலக்சி நோட் 10, கேலக்சி நோட் 10+ இன் அம்சங்கள்!

TechNews Tamil

ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகியுள்ள மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil