விவோ நிறுவனத்தின் வி19 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகமானது.
இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 26 ஆம் தேதி அறிமுகமாக இருந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த மாத இறுதியில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.
விவோ வி19 ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினையும், 2400×1080 பிக்சல் ரெசல்யூஷனையும் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும் இது, குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம், 128ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது.
மேலும் இது மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது. இது பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை முன்புறத்தில் 32 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஃபன்டச் ஒஎஸ் 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டுள்ளது. இது 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.