விவோ நிறுவனத்தின் Vivo V17ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
இந்த Vivo V17, Android 9 Pie இயங்குதளத்தை அடைப்படையாகக் கொண்டு FuntouchOS 9.2 கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது 6.38 இஞ்ச் full-HD உடனான 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இது Super AMOLED FullView டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை in-display fingerprint scanner கொண்டுள்ளது.

மேலும் இது octa-core Qualcomm Snapdragon 665 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 மெகாபிக்சல்களுடனான முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் ultra-wide-angle கேமரா, 2 மெகாபிக்சல் macro கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் sensor சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
செல்பிக்காக, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.
மேலும் இது microSD card slot வழியாக 256 ஜிபி வரை நீட்டிக்கக்கூடியது. Bluetooth 5.0, dual 4G VoLTE, dual-band Wi-Fi, USB Type-C port போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 4,500mAh பேட்டரி கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.