விவோ V17 ப்ரோ ஸ்மார்ட் போன், இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இது வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் விலையில் இருக்கும் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை, இந்த போனில் 4 பின்புற கேமராக்கள் உள்ளது, மேலும் 48 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
பின்புற கேமராவைப் பொறுத்தவரை 48 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் வைட் ஆங்கில் கேமரா, 13 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ், 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் கேமராக்கள் போன்றவை உள்ளது.

இதில் செல்ஃபிகளுக்காக டூயல் பாப்-அப் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன., அதில் 32 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமராவும் 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் கேமராவும் இருக்கும்.
ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் கொண்டு இயங்க்க் கூடியதாக உள்ளது, 6.44 இன்ச் முழு எச்.டி+ சூப்பர் ஆமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஒ.சி ப்ராசஸர் போன்றவைகளும் இதில் அடக்கம்.