Mobile

விவோ வி15 ப்ரோ மீது ரூ.5000 விலைக்குறைப்பு!

விவோ நிறுவனம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அதன் Vivo V15 Pro ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அது இந்திய சந்தையில் ரூ.28,990/- என்கிற ஆரம்ப விலையின் கீழ் விற்பனையை தொடங்கியது. 

அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் அதன் முதல் விலைக்குறைப்பை சந்தித்தது, அதாவது ரூ.2,000/- என்கிற விலைக்குறைப்பை பெற்றது.

விவோ வி15 ப்ரோ மீது ரூ.5000 விலைக்குறைப்பு!

பின்னர் ரூ.26,990/-க்கு அதன் இந்திய விற்பனையை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு “நம்பமுடியாத” விலைகுறைப்பை, அதுவும் நிரந்தரமான விலைகுறைப்பை பெற்றுள்ளது. 

நேற்று தொடங்கி (ஆகஸ்ட் 1) இந்த விலைகுறைப்பானது அமலுக்கு வந்துள்ளதாக விவோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முறை Vivo V15 Pro ஆனது ரூ.3,000/- என்கிற Price Cut-ஐ பெற்றுள்ளது. இந்த அதிரடி விலைக்குறைப்பிற்கு பின், Vivo V15 Pro-வின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.23,990/-க்கும், மறுகையில் உள்ள 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.26,990/-க்கும் வாங்க கிடைக்கிறது. 


அம்சங்களை பொருத்தவரை, விவோ வி15 ப்ரோ ஆனது 91.64% அளவிலான Screen-to-body-ratio மற்றும் 19:9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட 6.39 இன்ச் Ultra FullView டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 8GB RAM மற்றும் 128GB உடனான Qualcomm Snapdragon 675 AIE octa-core ப்ராசஸர் கொண்டு இயக்கப்படுகிறது. 

Related posts

ஐடெல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போன்!!!

TechNews Tamil

5ஜி சேவையுடன் போல்டபில் ஐபேட் விரைவில் அறிமுகம்!

TechNews Tamil