விவோ நிறுவனம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.
விவோ U20 ஸ்மார்ட்போன் விலை குறித்த தகவல்கள் ஏதும் தற்போது வெளியாகவில்லை.
இந்த ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, பாதுகாப்பினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டதாக உள்ளது.

மேலும் இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் கொண்டுள்ளது, இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு செயல்படக் கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி சென்சார். 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் உள்ளன.
மேலும் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.
இந்த விவோ U20 ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.
மேலும் இது வைஃபை, ஜிபிஎஸ், வோல்ட்இ,மைக்ரோ யுஎஸ்பி போர்ட் 2.0, போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.