Mobile

வெளியானது விவோ U20 ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

1.   Vivo U20 ஸ்மார்ட்போனின் 4GB + 64GB உள்ளடக்க மெமரி கொண்ட வகையின் விலை- 10,990 ரூபாய்

2.   Vivo U20 ஸ்மார்ட்போனின் 6GB + 64GB உள்ளடக்க மெமரி கொண்ட வகையின் விலை-11,990

இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

வெளியானது விவோ U20 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பினைப் பொறுத்தவரை இது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டதாக உள்ளது. Funtouch OS 9 டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது octa-core Qualcomm Snapdragon 675 SoC சிப்செட் கொண்டுள்ளது, இது ஆண்ட்ராய்டு  9பை இயங்குதளத்தை கொண்டு செயல்படக் கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 16 எம்பி பிரைமரி சென்சார். 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ கேமரா போன்றவைகள் உள்ளன.

மேலும் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது microSD card slot மூலம் 256GB வரை நீட்டிக்க கூடியதாக உள்ளது.

இந்த விவோ U20 ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

மேலும் இது வைஃபை, ஜிபிஎஸ், வோல்ட்இ,மைக்ரோ யுஎஸ்பி போர்ட் 2.0, போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

48MP கேமிரா ஸ்மார்ட் போன் உடன் வெளியான மோட்டோரோலா ஒன் ஸூம்

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு!

TechNews Tamil

34 ஸ்மார்ட்போன்களுக்கு எச்சரிக்கை விடுத்த க்வால்காம் !

TechNews Tamil