விவோ நிறுவனத்தின் இந்த Vivo U20 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் 2 வது விற்பனையினை நேற்று துவக்கி உள்ளது.
1. Vivo U20 4GB RAM மெமரி வகையின் விலை – ரூ. 10,990
2. Vivo U20 6GB RAM மெமரி வகையின் விலை – ரூ. 11,990
இந்த ஸ்மார்ட்போன், Amazon மற்றும் Vivo.com மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.

ICICI வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், போன்றவற்றின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால், ரூ. 1,000 வரை தள்ளுபடியை வழங்குகிறது
இந்த ஸ்மார்ட்போன் ஆனது Qualcomm Snapdragon 675 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் full-HD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
மேலும் இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் macro கேமரா போன்றவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் முன்பக்கத்தில், செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமரா போன்றவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் இது microSD card slot வழியாக மெமரியினை நீட்டிக்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது dual 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0 போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.