விவோ நிறுவனம் விவோ யு 10 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,990 என்ற விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் விவோ யு 10 ஆனது எச்டி+ ரெசல்யூஷன் கொண்டுள்ளது, மேலும் இது 6.35 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது வி-வடிவ நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ளது. சேமிப்பினைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு அளவினைக் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 ப்ராசஸர் மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இதில் சிறப்பு அம்சமாக கைரேகை ஸ்கேனரும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் இது 3 கேமரா உள்ளது. மேலும் இது 13MP முதன்மை சென்சார் + 8MP அல்ட்ரா-வைட் கேமரா + 2MP பொக்கே கேமரா போன்றவைகளையும் கொண்டுள்ளது.
இது 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது. கேமிங் ஆர்வலர்களுக்கு அதிக அளவிலான் சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது உள்ளது.