விவோ நிறுவனம் விவோ யு 10 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,990 என்ற விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.6,000 மதிப்புள்ள ஜியோ சலுகைகள் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறப்பு தள்ளுபடியாக விவோ தளத்தில் வாங்கினால் கூடுதலாக ரூ. 750 ஆஃபரும் கிடைக்கும் என்று தெரிகிறது.

விவோ யு 10 ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் அளவிலான பேட்டரியினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 665 ப்ராசஸர் கொண்டுள்ளது.
மேலும் இந்த போனின் 3 ஜிபிரேம் + 32 ஜிபி சேமிப்பு அளவு கொண்ட வகையானது ரூ.8,990 க்கு வெளியாகியுள்ளது. இதன் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு கொண்ட வகை ரூ. 9,990க்கும் மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு கொண்ட வகையானது ரூ. 10,990 க்கும் விற்பனையாக உள்ளது.
இதன் விற்பனை அமேசான் மற்றும் விவோவின் இணையதளங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று துவங்கவுள்ளது.