Mobile

இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது விவோ எஸ்7 5 ஜி ஸ்மார்ட்போன் !!

விவோ எஸ் 7 5 ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆகஸ்ட் 3 ஆம் தேதி இன்று இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

இந்த விவோ எஸ் 7 5 ஜி ஸ்மார்ட்போன் குறித்த டீசரில் வெளியாகியுள்ள அம்சங்களை வெய்போ வெளியிட்டுள்ளது.இ ந்த விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் இரட்டை செல்பி கேமராவினைக் கொண்டு இருக்கும்.

மேலும் இது ஆட்டோஃபோகஸ் சென்சாரினையும் 44 எம்பி செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் செவ்வக வடிவ கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது விவோ எஸ்7 5 ஜி ஸ்மார்ட்போன் !!

மேலும் இது 64 எம்பி முதன்மை சென்சார் கேமரா, சாம்சங் ஜி டபுள்யூ 1 சென்சார், 8 எம்பி சூப்பர் வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 13 எம்பி சாம்சங் போர்ட்ரெய்ட் சென்சார்  போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது முன்புறத்தில் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை முன்புறக் காட்சியில் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது.

மேலும் இது முழு ஹெச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் அமோலெட் பேனலைக் கொண்டதாக உள்ளது. மேலும் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் விவோ எஸ் 7 5ஜி ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலி கொண்டு இயங்குவதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 ஜி ஆதரவுவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன் டச் யுஐ மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களில் வெளியாகி வருகின்றது.

Related posts

சீனாவில் அறிமுகமானது பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி வெளியீடு!

TechNews Tamil

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் இப்படி ஒரு வசதியா.!

TechNews Tamil