விவோ நிறுவனத்தின் விவோ ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி விவோ எஸ்1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது.
இந்த ஸ்மார்ட்போன் மாடலை நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது, இந்தத் தகவலானது 91Mobiles வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
1. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் விலை- ரூ.16,990
2. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் விலை- ரூ.18,990
விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் 6.38 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 16எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
இந்த விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இது 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.