விவோ நிறுவனத்தின் அசத்தலான விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஆகஸ்ட் 7-ம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலை பேடிஎம் வழியே வாங்கினால் குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்
பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக்
கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால்
அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்
என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.
விவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட
பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.