Mobile

டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் விவோ எஸ்1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.38 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியினைக்  கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் கொண்டு இயங்குகிறது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.

டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

மேலும் இது 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவைகள் உள்ளன.

மேலும் இது பின்புறத்தில் 32எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. மேலும் இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது ரெட்மி கே30 ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இன்று ஆரம்பமானது Oppo A5 2020 இன் விற்பனை!!

TechNews Tamil

விலை நிர்ணயம் செய்யப்பட்ட விவோ வி19 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil