Mobile

விவோ எஸ்1 இந்தியா சேல்: ஆஃப்லைன் விற்பனை தொடங்கியது

நேற்று இந்தியாவில் அறிமுகமான விவோ நிறுவனத்தின் Vivo S1 ஸ்மார்ட்போன் அதன் ஆஃப்லைன் விற்பனையை இன்று முதல் தொடங்கியுள்ளது. அறிமுகமான விவோ எஸ்1 ஆனது மூன்று பின்புற கேமராக்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் அட்டகாசமானதொரு வடிவமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. 


வெளியீட்டு நிகழ்வில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் விவோ நிறுவனம் அதன் சமீபத்திய விவோ ஸ்மார்ட்போனை, அங்கீகரிக்கப்பட்ட சில்லறை கடைகளின் வழியாக தற்போது விற்பனை செய்து வருகிறது. விற்பனை சலுகையாக கேஷ்பேக் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விவோ எஸ்1 இந்தியா சேல்: ஆஃப்லைன் விற்பனை தொடங்கியது

விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாதிரியான 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் மட்டுமே நிறுவனத்துடன் கூட்டணி கொண்டுள்ள விற்பனையாளர்கள் ஆன ரிலையன்ஸ் டிஜிட்டல், பூர்விகா, பிக் சி, லாட், சங்கீதா, க்ரோமா மற்றும் விஜய் சேல்ஸ் வழியாக வாங்க கிடைக்கும் என்பதை குறிப்பிட விரும்புகிறோம். 


விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலானது ரூ.17,990/- என்கிற இந்திய விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கொண்டு வாங்கினால், ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளில் 7.5% கேஷ்பேக் கிடைக்கும். உடன் ஜியோ சந்தாதாரர்களுக்கு ரூ.10,000/- மதிப்பிலான நன்மைகளும் கிடைக்கும். 

சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து விவோ எஸ்1-ஐ வாங்குவதற்கு பேடிஎம் ஆப்பை பயன்படுத்தினால் Paytm கேஷ்பேக் கிடைக்கும் மற்றும் Instacash வழியாக 10% கூடுதல் எக்ஸ்சேன்ஜ் மதிப்பு அணுக கிடைக்கும்.

இந்த 4 ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது அதன் இந்திய ஆன்லைன் விற்பனையை ஆகஸ்ட் 14 முதல் தொடங்குகிறது, மறுகையில் உள்ள 6 ஜிபி ரேம் வகைகள் ஆனது இம்மாத இறுதியில் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Related posts

அடுத்த மாதம் ColorOS 7 அப்டேட் கொண்டு வரக்கூடிய Realme X2 Pro!

TechNews Tamil

மலிவு விலையில் அறிமுகமானது Moto G8 Play!

TechNews Tamil

இந்தியாவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்!

TechNews Tamil