Gadgets

8040 எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ பேட் டேப்லெட் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ பேட் டேப்லெட்டை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த விவோ டேப்லெட் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ பேட் 11 இன்ச் 2.5கே WQXGA வசதி, 2560×1600 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு கொண்டுள்ளது.

விவோ பேட் 7என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 650 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

விவோ நிறுவனம்

மெமரி அளவாக விவோ பேட் சாதனம் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளை கொண்டுள்ளது.

கேமரா அளவாக பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆதரவு மற்றும் 8எம்பி கேமரா ஆதரவு
கொண்டுள்ளது.

பேடட்ரி அளவினைப் பொறுத்தவரை விவோ பேட் 8040 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 6, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி மற்றும் என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

ரூ. 22,995 க்கு அறிமுகமான ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

ரூ. 19,995க்கு விற்பனையைத் துவக்கியுள்ள புமா ஸ்மார்ட் வாட்ச்!!

TechNews Tamil

விற்பனையைத் தொடங்கிய Mi Band 4!!

TechNews Tamil