மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y52s ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ Y52s ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் டிஸ்பிளேவினையும், மேலும் 1,080×2,408 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் MediaTek Dimensity 720 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. விவோ Y52s ஸ்மார்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும்ம் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த விவோY52s ஸ்மார்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் /ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த விவோ ஒய் 52s ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட் Dual Engine பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.