மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் சீனாவில் விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் டீப் ஸீ ப்ளூ மற்றும் கிளாசிக் ஆரஞ்சு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாகவும், 2376 x 1080 பிக்சல் தீர்மானம், எச்டிஆர்10+ ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டதாகவும் உள்ளது.

இது ஸ்னாப்டிராகன் 888 5என்எம் பிராசஸர் வசதியி இடம்பெற்றுள்ளது. மேலும் OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாகவும் உள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 50 எம்பி மெயின் கேமரா, 48 எம்பி கேமரா 32 எம்பி போர்ட்ரெயிட் கேமரா, 8 எம்பி கேமரா, 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இது 4200 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏஎக்ஸ்,புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.