மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் விவோ வை51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ வை51 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ வை51 ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் சபையர் மற்றும் க்ரிஸ்டல் சிம்பனி வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
விவோ வை51 ஸ்மார்ட்போன் ஆனது 6.59 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.