Mobile

விவோ நிறுவனத்தின் விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த  விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது 91.2 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி அளவினைக் கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது.

விவோ நிறுவனத்தின் விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போன் வெளியீடு!

இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 820 சிப்செட் மூலம் இயங்குவதாகவும் உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 ஐ ஃபன்டச் ஓஎஸ் ஆதரவினைக் கொண்டுள்ளது, பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

விவோ எஸ் 7டி கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 44 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரெட்மி நோட் 8 Pro இன் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

வெளியானது அசரவைக்கும் அம்சங்களுடன் ஹூவாய் பி40 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil