Vivo D1 Pro 5G launches tomorrow in India
Mobile

இந்தியாவில் நாளை அசர வைக்கும் அம்சங்களுடன் விவோ டி1 ப்ரோ 5ஜி வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் நாளை இந்தியாவில் விவோ டி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது.

விவோ டி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் கொண்டுள்ளது.

விவோ டி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளமாக Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமரா அளவாக விவோ டி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் முன்புறத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

மெமரி அளவாக விவோ டி1 ப்ரோ 5ஜி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

விவோ டி1 ப்ரோ 5ஜி 4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி,4ஜி எல்டிஇ, வைஃபை 6, 3.5எம்எம் ஆடியோ ஜாக், புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

தாய்லாந்தில் ஒப்போ ரெனோ 7 Z 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அசத்தலான விலைகுறைப்பு.!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil