Mobile

சீனாவில் அறிமுகமானது விவோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தனது வி20 ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டு உள்ளது. இந்த விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் ஸ்னாப்டிராகன் 765ஜி  பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது அட்ரினோ 620 GPU வசதியினையும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

சீனாவில் அறிமுகமானது விவோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை 44 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா சென்சார், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் 2 எம்பி மோனோ சென்சார் கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் பன்டச் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

இது இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி SA, 5ஜி NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டதாகவும், மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும்  33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி நிறங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

முதல் முறையாக விற்பனைக்கு வந்த Realme C3!

TechNews Tamil

அறிமுகமானது மெய்ஸூ 17 மற்றும் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்!

TechNews Tamil

அறிமுகமாகின்றது சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil