Apps

ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம்!!

கூகுளின் செயலிகளில் ஒன்றான ஜூம்  செயலியானது மற்ற காலங்களைவிடகொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதிக பயன்பாட்டினைக் கொண்டு இருந்தது, இந்த செயலி மூலம் பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசி வந்தனர்.

இது சாதாரண நபர்களின் பயன்பாடாக மட்டும் அல்லாது, கார்ப்பரேட்டுகளிலும் உரையாடல்களை மேற் கொள்ள பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் மூலம் கற்பிக்க நினைப்போர் இதன்மூலமே கற்பித்து வந்தனர்.

ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம்!!

தற்போது ஜூம் செயலியில் விர்ச்சுவல் மீட்டிங்ஸ் அம்சம் வெளியாகியுள்ளது. அதாவது வீடியோ கால் பேசும் போது அலுவலகத்தில் இருக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் அந்த அம்சம் இருக்கும்.

ஜூம் வீடியோ செட்டிங்ஸ் பகுதியில் லைட்டிங் மற்றும் பேக்கிரவுண்ட்டை மாற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அம்சமானது ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் ஆண்ட்ராய்டு செயலியில் பேக்கிரவுண்ட்களை மாற்றி படங்களையோ அல்லது வீடியோக்களை பேக்கிரவுண்டாக செட் செய்ய முடியும்.

இந்த ஜூம் செயலியானது தற்போது பணியாளர்களுக்கு, உதவும் வகையில் உள்ளதால் நிறுவனங்களின் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

Related posts

இனி வாட்ஸ்அப் வெப் வெர்ஷனிலும் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி!!

TechNews Tamil

ஸ்விக்கி செய்த செயலால் மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

TechNews Tamil

ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு… வெளியானது தகவல்!!

TechNews Tamil