சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் செப்டம்பர் 6ம் தேதி, நிலவில் தரை இறங்கும் பொழுது செயலிழந்தது. அதன்பின்னர் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து செயலிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
விக்ரம் லேண்டருடன் இணைப்பினைப் பெற பல வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றனர். இதுவரை முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

நாசாவுட இணைந்து செய்யப்பட்ட முயற்சியிலும் தோல்வி ஏற்பட்டது, இதற்கிடையில் மிக மோசமான விஷயமாக விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் இன்றுடன் முடிவடைகிறது.
நிலவில் நாளை முதல் 14 நாட்களுக்கு இரவு துவங்குகிறது.
இதனால் நிலவில் குளிர் காலம் ஏற்படும் என்பதால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் பாதிப்படையும்.
இந்த தட்பவெப்ப நிலையில், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரால் செயல்படாது. முக்கியமாக விக்ரம் லேண்டரின் பாகங்கள் சேதமடைந்துவிடும். எனவே விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் ஆயுள் இன்றுடன் நிறைவடைகிறது.
சந்திரயான் 2 திட்டம் தோல்வி அடைந்தாலும், அதற்கு நம்பிக்கை ஊட்டும்விதமாக பலரும் அதற்கு வாழ்த்துகளும் நம்பிக்கையும் தெரிவித்து வருகின்றனர்.