ஸ்மார்ட் டிவி தயாரிப்பு நிறுவனமான வியூ நிறுவனம் ஸ்மார்ட் மாஸ்டர்பீஸ் டிவி என்ற டிவியினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த வியூ இந்தியா ஸ்மார்ட் டிவி மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
வியூ மாஸ்டர்பீஸ் டிவி QLED டிஸ்ப்ளேவினையும் மேலும் உள்ளமைக்கப்பட்ட 50W சவுண்ட்பார் வசதியினையும் கொண்டுள்ளது.
மலிவு விலைக்குப் பெயர் போன இந்த வியூ மாஸ்ட்ர் பீஸ் டிவி அமெரிக்க டாலர் மதிப்பில் ஏறக்குறைய 5883 டாலர் விலையில் அறிமுகமாகியுள்ளது.

இந்த டிவியானது 85 அங்குல 4கே டிஸ்ப்ளேவினையும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது எச்டிஆர் 10 ப்ளஸ் டால்பி விஷன் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
வியூ மாஸ்டர்பீஸ் டிவி ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
இந்த டிவியானது மெய்நிகர் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட் டெக்னாலஜியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் வைஃபை, ப்ளூடூத் 5.0, நான்கு எச்டிஎம்ஐ போர்ட்கள், பல யூஎஸ்பி போர்ட்கள், ஆப்டிகள் பாயிண்ட் மற்றும் ஒஎக்ஸ் போர்ட் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவியானது இன்டெல் கோர் ஐ5 செயலி வியூ மாஸ்டர்பீஸ் டிவியினைக் கொண்டுள்ளது, மேலும் விண்டோஸ் 10 பிசி மேம்படுத்தலைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்டிவியானது இன்டெல் கோர் ஐ5 செயலி மூலம் வயர்லெஸ் கீபோர்ட் மற்றும் வயர்லெஸ் மைக்ரோபன் இயக்கமுறை கொண்டதாகவும் உள்ளது.