Apps

சோதனையில் இருந்துவரும் டெலிகிராம் செயலியின் வீடியோ காலிங்க் அம்சம்!!

தற்போது 400மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் சிறந்த செயலியாக இருந்துவரும் டெலிகிராம் தற்போது மற்றுமொரு சேவையில் கவனம் செலுத்தி வருகிறது.

அதாவது ஜூம் செயலி தடைசெய்யப்பட்ட பின்னர், ஒவ்வொரு செயலியும் வீடியோ காலிங்க் அம்சத்தினை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது, அந்த வரிசையில் தற்போது டெலிகிராமும் இணைந்துள்ளது, அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் டெலிகிராம் நிறுவனம் அதன் பாதுகாப்பான க்ரூப் வீடியோ கால் அம்சத்தை கொண்டு வருவதாக நிறுவனம் தரப்பில் ஏப்ரல் மாதம் தகவல்கள் வெளியாகின.

சோதனையில் இருந்துவரும் டெலிகிராம் செயலியின் வீடியோ காலிங்க் அம்சம்!!

இந்தநிலையில் தற்போது டெலிகிராம் செயலியின் வீடியோ காலிங்க் அம்சம் மேம்படுத்தப்பட்டு சோதனையில் இருப்பதாகவும், விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது, அதாவது டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆனநிலையில், 4 ஆண்டுகள் கழித்து வெளியாகும்  டெலிகிராம் வீடியோ கால் அம்சத்திற்கு பெரிய அளவில் வரவேற்ப்பு உள்ளது.

தற்போதைக்கு சோதனை வெளியீடாக, செயலியின் 7.0 வெர்ஷனில் வழங்கப்பட உள்ளது. மேலும் தற்போது இதனைப் பயன்படுத்த வேண்டுமெனில், மைக்ரோசாப்ட் ஆப் சென்டர் மூலம் கனெக்ட் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

பப்ஜி விளையாடி உயிர் இழந்த 16 வயது சிறுவன்!!

TechNews Tamil

அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ள அமேசான்!!

TechNews Tamil

ஒரு லட்சம் வீடியோக்களை நீக்கிய யூடியூப்!!

TechNews Tamil