Apps

4 ஆண்டுகள் கழித்து டெலிகிராமில் வீடியோ காலிங்க் அம்சம்!!

தற்போது 400மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் சிறந்த செயலியாக இருந்துவரும் டெலிகிராம் தற்போது மற்றுமொரு சேவையினை களம் இறக்கி பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

அதாவது டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆனநிலையில், 4 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள  டெலிகிராம் வீடியோ கால் அம்சத்திற்கு பெரிய அளவில் வரவேற்பானது கிடைத்துள்ளது.

தற்போது வீடியோ காலிங்க் அம்சமானது, செயலியின் 7.0 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டெலிகிராம் டூயல் ஹேப்பி என்பதுபோல் அனிமேட்டெட் எமோஜி அம்சத்தினையும் வழங்கியுள்ளது. 

4 ஆண்டுகள் கழித்து டெலிகிராமில்  வீடியோ காலிங்க் அம்சம்!!

மேலும் டெலிகிராமின் இந்த வீடியோ கால் அம்சத்தில் வீடியோவை ஆன் அல்லது ஆஃப் செய்வது மற்றும் வீடியோ மற்றும் வாய்ஸ் கால்களிடையே மாற்றிக் கொள்ளும் வசதி போன்றவைகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இது பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி கொண்டதாகவும், மல்டி-டாஸ்கிங் செய்யும் வசதி கொண்டதாகவும், மேலும் அனைத்து கால்களை முழுமையான என்க்ரிப்ஷன் செய்வதாக உள்ளது.  

இப்போதுதான் டெலிகிராமில் வீடியோ காலிங்க் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இதில் க்ரூப் வீடியோ கால் அம்சம் நிச்சயம் எதிர்காலத்தில் கிடைக்கப் பெறலாம் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த வீடியோ காலிங்க் அம்சம் டெலிகிராம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்ட வீடியோ காலிங்க் அம்சத்தைவிட பயனர்கள் விரும்பும் வகையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

சென்னைப் பேருந்து வசதிகளை அறிந்துகொள்ள ஒரு ஆப்.!!

TechNews Tamil

டிவிக்களுக்கு அமேசான் அறிவித்துள்ள தள்ளுபடிகள்!!

TechNews Tamil

வாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து கருத்துக் கணிப்பு நடத்திய இந்திய நிறுவனம்!!

TechNews Tamil