மற்ற காலங்களைவிட கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் வீடியோ கால் சேவையானது அதிக பயன்பாட்டினைக் கொண்டு உள்ளது, வீடியோ செயலி மூலமே பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசி வந்தனர்.
ஜூம் வீடியோ சந்திப்புகளில், பாதுகாப்பின்மை அபாயம் நிலவியதால், இதன் பயன்பாட்டிற்கு பல நாடுகளும் தடை விதித்தது.
சில மாதங்களுக்கு முன்னர், ஜூம் பயன்பாட்டால் பாதுகாப்பின்மை பிரச்சினை கிளம்பியது, அதாவது சைபர் பாதுகாப்பின்மை அபாயம் ஜூம் செயலியில் உள்ளதாக கூறப்பட்டது.

அதாவது ஜூம் பயன்பாட்டை பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பயனர் சாதனத்தின் தகவல்கள் போன்றவை ஹேக்கிங்க் செய்யப்படுவதாக கூறப்பட்டது. இதனால் இது தடைசெய்யப்பட, ஜூம்செயலிக்கு மாற்று போல் கூகுள் மீட், வாட்ஸ் ஆப் வீடியோ கான்பரன்ஷிங்க், மெசஞ்சர் வீடியோ கால் போன்ற பல செயலிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது, இந்த நிலையில் சமீபத்தில் வீடியோ கான்பரன்சிங் நுட்பத்தில் கால் பதிக்க ஜியோ முடிவு செய்து அதுகுறித்த அறிவிப்பினையும் வெளியிட்டது.
தற்போது கடும் போட்டிகளுக்கு இடையே மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் விரைவில் ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீம்ஸ் சேவையில் 7*7 வடிவில் 49 பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தகவல் வெளியிட்டுள்ளார்.