Apps

கூகுள் நிறுவனத்தின் டுயோ மூலம் வீடியோ கால்களா?

கூகுள் அசிஸ்டண்ட் இனி கூகுள் நிறுவனத்தின் டுயோ மூலம் வீடியோ கால்கள் செய்துகொள்ள முடியும்.

கூகுள் அசிஸ்டண்ட் செயலி பயன்படுத்தினால் கூகுள் அசிஸ்டண்டில் குரலால் கட்டளையிட்டோ  அல்லது வீடியோ கால் எனத் உள்ளீடு கொடுத்து டுயோ வீடியோ கால் செய்ய முடியும் என கூகுள் ஒரு பதிவில் தெரிவித்திருக்கிறது.

இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-ஓஎஸ் டுயோவின் சமீபத்திய வெர்ஷனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி இன்ஸ்டால் செய்யாத பயனர்களுக்கு, வீடியோ அழைப்புகள் கூகுளின் மற்றுமொரு மெசேஜ் மற்றும் வீடியோ சாட் தளமான ஹாங்அவுட்சிற்கு மாற்றப்படும்.

கூகுள் நிறுவனத்தின் டுயோ மூலம் வீடியோ கால்களா?

இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஆண்ட்ராய்ட் கூகுள் டுயோ பல- சாதன சப்போர்ட் பெற்று, டேப்லட்டுகளுக்கு என்று புதிய அம்சம் ஒன்றைச் சேர்த்துள்ளது.

செர்வர் சைட் அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டு ஆரம்பத்தில் ஒருசில பயனர்களுக்கு மட்டும் இந்த அனுபவங்கள் கிடைத்தாலும், விரைவில் பெருவாரியான பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் குறிப்பிட்டுள்ளதைப் போல, ஆண்ட்ராய்ட் டுயோ செயலி டேப்லட்டுகளுக்கு எனப் புதிய அம்சங்களைப் பெற்றுள்ளது. இந்த புதிய அம்சம் வீடியோ விண்டோவை திரை முழுமைக்கும் காண்பிக்கிறது.

Related posts

போலித் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த வாட்ஸ் ஆப் நிறுவனம்!!

TechNews Tamil

விளம்பரதாரர்களிடம் வசூல் செய்ய காத்திருக்கும் வாட்ஸ் அப்!

TechNews Tamil

வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக அறிமுகமானது அமேசான் பே லேட்டர்!

TechNews Tamil